சிந்தனை செய்
Wednesday, 20 March 2024
மாணவன்
புது வண்ணம் பூசப்படாத பள்ளி இருக்கையில் உள்ள பெயர்கள் நினைவுகளாக வண்ணம் பூசிக் கொண்டிருந்தது பழைய மாணவர்களை....
Thursday, 21 December 2023
புத்தகம்
பல வண்ணங்களில் நீ இருக்கிறாயே(அட்டை வண்ணம்)
பஞ்சவர்ண கிளியா!
வானவில்லா!
நவ ரத்தினமா!
எந்த வண்ணம் கொண்டு உன்னை அறிவேன்
உன் வண்ணம் தான் நீயா இல்லை வேறா
உன் முகம் கண்டு அறிவேனா(முகவுரை)
இல்லை மனம் காண வேண்டுமா
உன்னை தொடுவதற்கே அச்சம் எனக்கு
என்னை எங்கு கொண்டு சேர்ப்பாயோ(எல்லையில்லாத கற்பனை, அறிவு)
உன் முகம் கண்டு மனம் காண ஆசை தான் எனக்கு (முக்கிய கருத்துக்கள்)
உன் மனதை அறிந்துவிட்டாலும் தீராது எனது ஆசை
மேலும் உன்னுடன் பயணிக்க அழைக்கிறது
உன்னோடு நானும் என்னோடு நீயும்(புத்தகம் வழியாக அறிவை பெற) கரையில்லா விரி வானம் காண
Thursday, 1 October 2020
Wednesday, 31 August 2016
தங்கை
என்றோஒரு நாள் அண்ணா என கூறி வந்தாள்
நானோ தமக்கையைப் பெற்றோம் என மனம் மகிழ்ந்திருந்தேன்
அன்றோ அவளிடம் அன்பு காட்ட என்னை போல் யாரும் இல்லையென கூறி களிப்படைந்தாள்
நானோ குருதி சாரா உறவிது இதில் இத்துனை இன்பம் உண்டோ என வியந்திருந்தேன்
அனு வேளையிலும் அண்ணா என அவளிருக்க
நானோ தங்கை என்ன செய்துகொண்டிருப்பாளோ என நினைத்துக்கொண்டிருந்தேன்
தங்கை எனும் உறவின் அன்பை அவளிடமே நான் உணர்ந்தேன்
புள்ளிமானையும் போல துள்ளி பல குரும்புகள் செய்து மகிழ்ந்திருந்தாள் என்னிடத்தில்
நான் கொண்டிருந்த அன்பும் அக்கறையும் கண்டு அவ்வேளையில் என்னை அம்மா என தான் அழைத்தாள்
இப்படி மகிழ்ந்திருந்த வேளையில் என் மனம் உடைகிற தகவல் ஏனோ அவ்விடத்தில்
அது தான் காதல் வயப்பட்டாள் என் தங்கை என
இத்தகவல் நான் அறிந்தது முதலே என் மீதான நெருக்கம் சற்று குறைய தொடங்கியது என் தங்கைக்கு
அண்ணா என அழைக்கும் சத்தமும் தொய்வு அடைந்தது
தங்கையின் காதலன் என்பவனால் என் தங்கைக்கே எதிரியாக்கப்பட்டேன் நான்
அவளின் அன்பை தொலைத்த வலி இன்னும் என்னுள்
அன்றோ என்னை அண்ணா என நினையாத நேரமில்லை அவளுக்கு
இன்று என்னை நினைக்ககூட விருப்பமில்லாத மன நிலை அவளுக்கு
இதைத்தான், இடையில் வந்த சொந்தம் இடையிலே போகும் என்பரோ......,

Tuesday, 16 August 2016
தனிமை
தீ புன் எரிவது போல இருக்கும்
நம்மை நாமே வருத்துகிற எண்ணங்கள் தோன்றும்
அனைத்து நிகழ்வும் நம்மை துன்புறுத்தும்
நட்பின் பிரிவினை தாமாய் ஏற்ப்போம்
மற்றவர்களுடன் பேசுவது கூட மனதிற்க்கு பிடிக்காது
நாம் பூமிக்கே பாரமென தோன்றும்
நம்மை எவருக்கும் பிடிக்காதது போல தெரியும்
ஒவ்வொரு நொடியும் நம்மை வருத்தும்
புன்னகை தொலைந்தே போய்விடும்
நமக்கு பிடித்ததும் பிடிக்காததாய் மாறும்
ஆறுதலுக்கு மனம் ஏங்கும்.,

Monday, 15 August 2016
மக்கள்
இந்தியர்கள்
மிகவும் வித்தியாசமனவர்கள்., அவர்களின் தேசப்பற்று நேற்று இரவிலிருந்து இன்று
காலை 10 மணி வரை மட்டுமே
பொங்கிவழியும் அதுவும் சமூக வலைதளங்களில்
மட்டும்
விடுதலை
அதிகார வர்க்கத்திடமிருந்து உழைக்கும் வர்க்கத்திற்கு இல்லை விடுதலை சிங்களர்களிடமிருந்து தமிழர்களுக்கு இல்லை விடுதலை
அலைபேசி மின் கோபுரத்தால் அழியும் குருவி இனத்திற்கு இல்லை விடுதலை
இரசாயன பூச்சி கொல்லி, உரங்களால் பூமிக்கு இல்லை விடுதலை
இரசாயன கலப்பு உணவால் பல நேய்கள் தாக்கி இறக்கும் மனிதர்களுக்கு இல்லை விடுதலை
மரங்களை வெட்டுவதால் வளங்களை இழக்கும் காடுகளுக்கு இல்லை விடுதலை
இராணுவத் தாக்குதலால் உயிரிழக்கும் நாட்டின் எல்லையில் வாழும் மக்களுக்கு இல்லை விடுதலை
அதிகார வர்க்கதிடமிருந்து பணத்திற்க்கு இல்லை விடுதலை
அதிகாரத்திற்கு முன்பு நியாயத்திற்க்கு இல்லை விடுதலை
ஜாதியால் இழிவுபடுத்தப்படும் ஒரு ஏழைக்கு இல்லை விடுதலை
மதத்தின் பெயரால் பல தாக்குதலுக்கு ஆளாகும் மக்களுக்கு இல்லை விடுதலை
இந்த சூழலில் நாம் எதைத் தான் விடுதலை அடைந்த நாளென கொண்டாடுகிறோம் என தெரியவில்லை....,

Labels:
நாடு
Subscribe to:
Posts (Atom)